×

சித்தேரி மலை ஊராட்சியில் நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்க விழிப்புணர்வு

அரூர், ஜூன் 14: அரூர் அருகே சித்தேரி மலை ஊராட்சியில் 63 குக்கிராமங்கள் உள்ளது. இப்பகுதி விவசாயிகள், வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக உரிமம் பெற்று நாட்டுத் துப்பாக்கி வைத்துள்ளனர். இதனிடையே, உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகரித்திருப்பதாக, மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து, மாவட்ட எஸ்பி ராஜன் உத்தரவின் பேரில், அரூர் டிஎஸ்பி செல்லப்பாண்டியன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சித்தேரி மலை கிராமங்களில் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதே போல், சித்தேரி, புதூர், பேரேரிபுதூர், சூரியகடை, தேக்கல்பட்டி, சூலகுறிச்சி, வெல்லாம்பள்ளி, நடுவளவு ஜல்லூத்து உள்பட 63 மலை கிராமங்களிலும் தண்டோரா போடப்பட்டது. கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள், வரும் 16ம் தேதி காலை 10 மணிக்குள், சித்தேரி மாரியம்மன் கோயிலில் தாங்களாகவே முன்வந்து துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். அப்படி  ஒப்படைக்கும் நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மீறி பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : country patrons ,village ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...