×

தர்மபுரி நகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

தர்மபுரி, ஜூன் 14:  தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும், சமீபகாலமாக தெருநாய்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து விட்டது. பிராணிகள் வதை தடுப்புச்சட்டத்தால், தெருநாய்களை கொல்வதை கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகங்கள் கைவிட்டு விட்டன. இதன் காரணமாக தெருநாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து விட்டது. இதை தடுக்க, தெருநாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. தர்மபுரி நகராட்சியில், தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி கடந்த மாதம் முதல் தொடங்கியுள்ளது.

நேற்று வரை 184 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.  புளூகிராஸ் ஆலோசகரும், கருத்தடை அறுவை சிகிச்சை நிபுணருமான கால்நடை மருத்துவர் சொக்கலிங்கம் தலைமையிலான குழுவினர், தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு வருகின்றனர். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் ரமணசரண், கோவிந்தராஜன், சுசீந்தரன், நாகராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : municipality ,Dharmapuri ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை