பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயன்பாட்டிற்கு வராத கிராம சேவை மையம்

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 14:  பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொம்மிடி ஊராட்சியில், கிராம சேவை மையம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், கடந்த 2014ம் ஆண்டு, ₹12 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்தும், பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே உள்ளது. இந்நிலையில், இந்த கட்டிடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல முறை புகார் கூறியும், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். எனவே, உரிய சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, இந்த சேவை மையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Service Center ,Pappirippatti ,
× RELATED கொட்டக்குடி கிராமத்தில் செயல்படாத...