×

காரைக்காலில் இருந்து திருவண்ணாமலைக்கு 2,650 டன் யூரியா சரக்கு ரயிலில் வந்தது

திருவண்ணாமலை, ஜூன் 14: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 2,650 டன் யூரியா சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரம் மற்றும் யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைத்திட போதிய யூரியா மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது, விவசாயிகள் மானாவாரி மணிலா பயிரிட ெதாடங்கியுள்ளனர். மேலும், போதிய மழை வந்ததும் சம்பா சாகுபடி செய்ய காத்திருக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா சாகுபடி மற்றும் விவசாயிகளுக்கு எந்த நேரத்திலும் உரம், யூரியா உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்திடும் வகையில் வேளாண்மை துறை சார்பில் போதிய உரம், யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் துறைமுகத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் நேற்று முன்தினம் திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு 2,650 டன் யூரியா கொண்டுவரப்பட்டது.

அதை தொடர்ந்து, ரயில் நிலையத்திலிருந்து நேற்று சரக்கு லாரிகள் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 1,750 டன் மற்றும் தனியார் உர விற்பனையாளர்ளுக்கு 200 என பிரித்து அனுப்பிவைக்கப்பட்டது. ேமலும் அரசு சேமிப்பு கிடங்கிற்கு 200 டன் அனுப்பிவைக்கப்பட்டது. மீதமுள்ள 500 டன் வேலூர் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குநர்(பொறுப்பு) ர.செல்வசேகர் கூறுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு போதிய அளவு உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களின் சேமிப்பு கிடங்குகளில் உள்ளது.  தற்போது, யூரியா 9,350 டன், டிஏபி 4,880 டன், பொட்டாஷ் 1,050 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 6,240 டன் இருப்பில் உள்ளது. விவாசாயிகள் உரம் வாங்க செல்லும் போது, உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று, மண்வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்கு தேவையான உரங்களை வாங்கிக்கொள்ளலாம். மேலும், பிஓஎஸ் இயந்திரம் மூலம் ரசீதுகளை விவசாயிகள் விற்பனையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Tags : Tiruvannamalai ,Karaikal ,
× RELATED தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது *...