×

பெரும்பாக்கம் பகுதியில் விதிமீறி குடிநீர் உறிஞ்சிய 15 வீடுகளின் இணைப்பு துண்டிப்பு

வேளச்சேரி: பெரும்பாக்கம் ஊராட்சியில், மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சியவர்களின் குழாய் இணைப்பை துண்டித்து, மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில் பொது குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது கோடைகாலம் என்பதால், இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து  கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு குடிநீர் வினியோகம் செய்யப்படும் நாட்களில் சிலர் மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி டேங்கில் சேமித்து வந்தனர்.

இதனால், மேடான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குழாய்களில் குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்படுவதால் குறைந்த நேரமே தண்ணீர் வருவதாக பல புகார்கள் வந்தன. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் நேற்று நேசமணி நகரில் வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தினர். இதில், 15 வீடுகளில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டது. பின்னர், அவர்களின் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டன. மேலும், மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து ஊராட்சி செயலாளர் ஜெயராமன் கூறுகையில், ‘தொடர்ந்து அனைத்து பகுதிகளிளும் வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தப்படும். மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினால்   கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

Tags : houses ,flood area ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...