×

உத்திரமேரூர் அருகே ஆணைப்பள்ளம் கிராமத்தில் விநாயகர், மாரியம்மன், கெங்கையம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ஆணைப்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த தயாளநிதி விநாயகர், மாரியம்மன்,  கெங்கையம்மன் ஆகிய கோயில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலை ஆணைப்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த தயாளநிதி விநாயகர், மாரியம்மன், கெங்கையம்மன் ஆகிய கோயில்களில் கடந்த சில மாதங்களாக புனரமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து, நேற்று மேற்கண்ட கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக கடந்த 2 நாட்களும் புண்யாவாசனம், வாஸ்து ஹோமம், சாந்தி ஹோமம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனை ஹோமம் உள்பட பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து நேற்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜை முடிந்தபின் மேளதாளங்கள் முழுங்க வாண வேடிக்கைகளுடன், சிவாச்சாரியார்கள் புனிதநீரை கொண்டு வந்து, கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர். இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் தயாளநிதி விநாயகர், மாரியம்மன், கெங்கையம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டி வழிபட்டனர். விழாவையொட்டி சுற்று வட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : temples ,Vinayagar ,village ,Ganjayamman ,Mariamman ,Uttiramerur ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு