×

திருவள்ளூரில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் இன்று  (14ம் தேதி) காலை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் தேவையாக இருப்பதால், அப்பணியிடங்களுக்கு வேலை ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி படித்தவர்கள் இன்று (14ம் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருவள்ளுரில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : employment camp ,Tiruvallur ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு