×

கும்மிடிப்பூண்டி பஜாரில் 30 லட்சம் அரசு நிலம் மீட்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜாரில் தபால் நிலையத்துக்கு 3 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டிருந்தார். இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்தது. கலெக்டரின் உத்தரவின்பேரில், வருவாய் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தபோது ஆக்கிரமிப்பு செய்திருந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு தலைமையில் வருவாய் துறையினர் அகற்றினர். இதன் மூலம் ₹30 லட்சம் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.

Tags : bazaar ,Gummidipoondi ,
× RELATED அருப்புக்கோட்டை மெயின் பஜாருக்கு...