×

மணல் கடத்தலைத் தடுக்க முயன்றவரை தாக்க முயற்சி

கம்பம், ஜூன் 13: கம்பத்தில் மணல் கடத்தலை தடுக்கமுயன்ற வருவாய்த்துறை ஆய்வாளரை தாக்க முயன்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்பம் புதுக்குளம் சாலையில் முன்னாள் அதிமுக துணைசேர்மன் காட்டில் மணலை  குவித்து வைத்த ஒரு கும்பல் விற்பனை  செய்வதாக  உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதனுக்கு புகார் ெசன்றது. அவரது உத்தரவின்பேரில்,  மார்க்கையன்கோட்டையை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் தர்மலிங்கம் தலைமையில் தனிப்படை சம்பவ இடத்திற்கு சென்றது.

அப்போது கம்பம் மெட்டு சாலையில் டிராக்டர் ஒன்று மணல் அள்ளிக்கொண்டு வந்தது. அனுமதிச்சீட்டு உள்ளதா என கேட்டதற்கு, டிராக்டரில் இருந்த நபர் தர்மலிங்கத்தை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சப் - கலெக்டரிடம் தகவல் தெரிவிக்க முயன்ற போது, டிராக்டரை அந்த நபர் எடுக்க முயன்றார். இதை மறிக்க முயன்ற ஆர்.ஐயை தாக்க முயற்சி செய்ததுடன், டிராக்டரை எடுத்துச் சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் ராஜ்குமார் என்பவர் மீது கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா கோலாகலம்