×

கூடலூர் அருகே மழைநீரால் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை

கூடலூர், ஜூன் 13: கோடைமழை நீரால் கூடலூர் - லோயர் தேசிய நெடுஞ்சாலையில் தார்ச்சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தார்ச்சாலை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன்பு சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்ற போது தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த சாலையில் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கேரள மாநிலத்திற்கு நாள்தோறும் கூலி தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கான ஜீப்களும், கேரள சுற்றுலா தலத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களும் இந்த பாதையில் சென்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடலூர் பகுதியில் பெய்த கோடை மழையில் உருவான வெள்ளம், சாலையோரங்களில் உள்ள கால்வாய் வழியே வெளியேறி உள்ளது. ஆனால், முறையான கால்வாய் வசதி இல்லாததால் தண்ணீர் செல்ல வழியில்லாமல், தேசிய நெடுஞ்சாலையில் புதுரோடு அருகே தார்ச்சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சேசதமடைந்து உள்ளது.

மேலும் பாலம் மற்றும் சாலை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தார்ச்சாலை சேதம் அடைந்த இடத்தை கண்டறிந்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : highway ,Kodalur ,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...