×

கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ மீது பெண் புகார்

தேனி, ஜூன் 13: கடமலைக்குண்டுவில் 9ம் தேதி நடந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனி கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.  தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர்  வனராஜா மனைவி லட்சுமி. இவர் தேனி கலெக்டர் பல்லவிபல்தேவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  கடமலைக்குண்டுவில் 9ம் தேதி  மண்டபத்தில் வசந்தவிழா நடத்தினோம். என் உறவினர்கள் ஜெயராமச்சந்திரனும், செல்வக்குமரனும் குடித்து விட்டு அவர்களுக்குள் தகராறு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ செல்வக்குமார் உள்ளிட்ட போலீசார் சண்டையை விலக்கி விடுவதுபோல உறவினர்கள் ஜெயராமச்சந்திரன், செல்வக்குமரன், வனராஜா உள்ளிட்ட 5 பேரை சரமாரியாக தாக்கினர். மேலும் நியாயம் கேட்ட பெண்களை ஆபாசமாக பேசியும்,  வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்து வீட்டில் உள்ள பொருள்களை சூறையாடினர். மேலும், விசேஷ வீட்டிற்கு வெளியூர்களில் இருந்து வந்தவர்களையும் தாக்கினர்.

இத்தாக்குதலை காரணம் காட்டி விசேஷ வீட்டினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்போகிறோம் எனவும், வழக்குப்பதியாமல் இருக்க ரூ.5 லட்சம் தரவேண்டும் எனவும், இதற்கு உன் விசேஷ வீட்டு மொய்பணம் பத்தாது. வீட்டை விற்றாலும் போதாது என ஏளனப்படுத்தினர். மேலும், 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாகவும் மிரட்டிச் சென்றனர்.

விசேஷ வீட்டிற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டு பெண்கள் மீது வன்முறை நடத்திய கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ செல்வக்குமார், ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம் டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 50 போலீசார் மீது விசாரணை நடத்திய உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Women ,Sexual Inspector ,SI ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...