×

காரைக்குடி நூலகத்தில் பணியாளர் பற்றாக்குறையால் புத்தகம் வழங்குவதில் சிக்கல்

காரைக்குடி, ஜூன் 13: காரைக்குடி நூலகத்தில், போதிய பணியாளர்கள் இல்லாததால், வாசகர்களுக்கு நூல்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காரைக்குடி கிளை நூலகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 250க்கும் மேற்பட்ட புரவலர்களும், 7800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் உள்ளனர். தினமும் 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். 150க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாசகர்களுக்கு இரவலாக கொடுக்கப்படுகிறது.

நூலகத்தின் கீழ் தளத்தில் புத்தக அறை, முதல் தளத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கான அறை உள்ளது. ஆள் பற்றக்குறையால் இந்த அறையை திறப்பதே கிடையாது. இதனால் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறனர். இந் நூலகத்தில் 4 தினக்கூலி பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், 2 பேர் மட்டுமே உள்ளனர். ஒரு தினக்கூலி பணியாளர் விடுமுறை எடுத்தால் கூட அரை நாள் நூலகத்தை பூட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இது தொடர்பாக வாசகர் வட்டம் சார்பில் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் பயனற்ற நிலைய உள்ளது. மாவட்ட நிர்வாகமும் இதனை கண்டு கொள்ளவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வாசகர்கள் கூறுகையில். ‘காலை 8 மணி முதல் 2 மணி வரை, மாலை 2 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் செயல்படுகிறது. இங்கு ஏற்கனவே மூன்று தினக்கூலி பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.

திடீர் என ஒருவரை நீக்கி உள்ளனர். 4 மாதமாக கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் பயனற்ற நிலை உள்ளது. பணியாளர்கள் இல்லாததால் நூல்கள் காணாமல் போய்விடுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் புத்தகங்கள் இருந்தும் வாசகர்களுக்கு கொடுக்க முடியாத நிலை உள்ளது’ என்றனர்.

Tags : Karaikudi Library ,
× RELATED உலக புத்தக தின விழா