×

மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகோள்

மண்டபம், ஜூன் 13: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப். 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரையிலான 60  நாட்கள் மீன்களுக்கான இனப்பெருக்க காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் வங்கக் கடலில் மீன்கள் வளர்ச்சியை எதிர்நோக்கும் வகையில், ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

இந்த காலத்தில் மீனவர்கள் கரையோர பகுதிகளில் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இக்காலத்தில் அரசு சார்பில் மீனவர்களுக்கு நிவாரண உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. எனவே கடலுக்கு செல்லாத காலக்கட்டங்களில் வலைகள் பின்னுதல், படகு சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மீன்பிடி தடைகாலம் வரும் சனிக்கிழமை முதல் முடிவடைந்து மீனவர்கள் அனைவரும் சனிக்கிழமை அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவுள்ள நிலையில் தற்போது ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி,  கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் மீனவர்கள் தங்களுக்கு தேவையான மீன்பிடி உபகரணங்களை விசைப் படகுகளுக்கு கொண்டு சென்று வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய மீனவர்கள் மற்றும் மீனவ சங்க தலைவர்கள்: தடைகாலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு மத்திய,மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்க வேண்டும். பாரம்பரிய இடமான கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்க இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

Tags : fishermen ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...