நாமக்கல் மாவட்டத்தில் 120 போலீசார் இடமாற்றம்

நாமக்கல், ஜூன் 13: நாமக்கல் மாவட்டத்தில், ஒரே போலீஸ் ஸ்டேசனில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வந்த 37 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 120 போலீசாருக்கு, வெவ்வேறு போலீஸ் ஸ்டேசனுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, மாவட்ட எஸ்பி அருளரசு பிறப்பித்துள்ளார். இதில் 3 ஆண்டுகள் முடிவடையாமல், இடமாறுதல் கேட்டு விண்ணப்பம் அளித்த ஒரு சில போலீசாருக்கும், இடமாறுதல் வழங்கப்பட்டு உள்ளது.

Tags : policemen ,Namakkal district ,
× RELATED திருவண்ணாமலை கார்த்திகை...