×

எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை

திருச்செங்கோடு, ஜூன் 13: எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லாததால், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் வெயிலில் அவதிப்படுகின்றனர். திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம், கொன்னையார்,  இலுப்புலி, கிளாப்பாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து வெளியூர் செல்பவர்கள், தினசரி பள்ளி கல்லூரி செல்லும்  மாணவ, மாணவிகள், தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் எலச்சிபாளையம் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்து பயணம் செய்வது வழக்கம்.

ஆனால், இங்கு நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மழை மற்றும் வெயில் காலங்களில் அருகில் உள்ள கடைகளில் தஞ்சமடைகின்றனர். இது பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த மன உளைச்சலை அளித்து வருகிறது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் நிழற்கூடம் கட்டித்தர வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Travelers ,bout ,bus stand ,Elichipalayam ,
× RELATED தொடர் மழை எதிரொலி வணிக வளாகத்தில் மழைநீர் புகுந்தது