அரசு வாரிய தேர்வில் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாநில அளவில் சாதனை

ராசிபுரம், ஜூன் 13:பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான வாரியத்தேர்வில், ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். இதில் மூன்றாமாண்டு 6ம் பருவம் சிவில் துறை 94.12, மெக்கானிக்கல் 99.26, ஆட்டோமொபைல் 100, எலக்ட்ரிக்கல் 99.48,  எலக்ட்ரானிக்ஸ் 97, கம்ப்யூட்டர் துறை 100,  தகவல் தொழில்நுட்பத்துறை 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டாமாண்டு 4ம் பருவம் சிவில் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை 100 சதவீதம், மெக்கானிக்கல் 94.46, ஆட்டோ மொபைல் 95, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் துறை 96, கம்ப்யூட்டர் துறை 98 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்றாமாண்டு இரண்டாம் பருவத்தில் 95 சதவீதம் பேர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மூன்றாமாண்டு 6ம் பருவத்தில் சந்தோஷ்குமார், தினேஷ், லோகேஸ், இரண்டாம் ஆண்டு 4ம் பருவத்தில் விக்னேஷ், ரித்திஷ் உள்பட 5 பேர் 700க்கு 700 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். மேலும், மூன்றாமாண்டு 6ம் பருவம் ஆதர்ஸ், பிரபாகரன், ஹரிகுமார், சூர்யா, சம்ரின் பானு, இரண்டாமாண்டு சையத் ஹாசன் ஆகிய 6 பேர், 699 மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை, தாளாளர் ராமசாமி, செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் விஜயகுமார், முதல்வர் விஜயகுமார், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

× RELATED ஜெய் ராம் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி