×

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் திண்டுக்கல்லில் விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல், ஜூன் 13: ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பேரணி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று தீயணைப்பு நிலையம் வரை வந்தது. இதில் 50க்கும் மேற்பட் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி வந்தனர். பேரணியை திண்டுக்கல் மாவட்ட பாரத சாரண சாரணியர் சங்க செயளர் சந்திரசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பேரணி முடிவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் குழந்தைகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வறுமை மற்றும் கல்வியின்மை காரணமாக குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தடை செய்யக் கோரியும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறிய நாடகத்தை நடத்தினர். இதை அப்பகுதி மக்களும் பார்த்துச் சென்றனர்.

கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி திண்டுக்கல்லில் நடந்த பேரணியில் ஒரேயொரு தனியார் பள்ளியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் அரசு, சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகள் எத்தனையோ இருந்தும் யாருமே கலந்துகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை கண்டு கொள்ளாமல் இருந்தது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Tags : rally ,Dindigul ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி