×

தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு யானைகளை விரட்டும் பணி தீவிரம்

ஓசூர், ஜூன் 13: ஓசூர் வனப்பகுதிக்கு உட்பட்ட அம்பலட்டியில், தக்காளி தோட்டத்தை நாசப்படுத்தி அங்கு முகாமிட்டுள்ள 7 யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரமடைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்தது. இந்த யானைகளில் 13 யானைகள் தேன்கனிக்கோட்டை வனத்திற்கு விரட்டப்பட்டுள்ளது. தற்போது 7 யானைகள் நேற்று முன்தினம் முதல் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து வனப்பகுதியையொட்டி உள்ள கிராம பகுதிக்கு சென்று விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில், நேற்று அதிகாலை 7 யானைகள், அம்பலட்டி அருகே கிராம பகுதிக்குள் நுழைந்து அங்கு பயிரிட்டிருந்த கோஸ், தக்காளியை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது. பின்னர் நீர்பாய்ச்ச தோட்டத்திற்கு வந்த விவசாயிகள், தக்காளி கோஸ் உள்ளிட்ட பயிர்கள் நாசமானது கண்டு வேதனை அடைந்தனர். இது குறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறியது தொடர்ந்து இந்த பகுதிகளில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் யானைகளை தேன்கனிக்கோட்டைக்கு இன்றோ அல்லது நாளையோ விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தற்போது பல குழுக்களாக பிரிந்துள்ள இந்த யானைகளை தாரை தப்பட்டையுடன் ஒன்றாக இணைத்து சானமாவு, பீர்ஜேப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, பென்னிக்கல், மண்குட்டை வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக யானைகள் ஓசூர்-ராயக்கோட்டை மாநில ெடுஞ்சாலையை கடக்க கூடும். எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : forest ,Dhenkanikottai ,
× RELATED யானை தாக்கி விவசாயி பலி