×

குளச்சலில் ஆட்டோவில் கடத்திய 400 கி.ரேஷன் அரிசி பறிமுதல்

குளச்சல், ஜூன் 13: குமரி  மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி, சப்  இன்ஸ்பெக்டர் சுரேஷ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் நேற்று அதிகாலை குளச்சல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு மறைவான இடத்தில்  ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. போலீசார் அந்த ஆட்ேடாவை சோதனையிட்டனர்.  அதில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில், கேரளாவுக்கு  கடத்துவதற்காக அரிசியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த  அரிசியையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். களியக்காவிளை மீனச்சலை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜன்(49) என்பவர் கைது செய்யப்பட்டார்.

Tags :
× RELATED நித்திரவிளை அருகே வீட்டின் மீது சாய்ந்த தென்னை மரம்