தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நிதியுதவி

தேன்கனிக்கோட்டை, ஜூன் 13:  தேன்கனிக்கோட்டை அருகே டி.குருபரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவப்பா(50). கார்பெண்டரான இவரது வீட்டிற்கு, மர்ம நபர்கள் நேற்று முன்தினம் தீ வைத்து விட்டனர். இதில் வீட்டில் இருந்த பணம், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி.பிரகாஷ் எம்எல்ஏ, தீ விபத்தில் சேதமான வீட்டை பார்வையிட்டு, மாதேவப்பா குடும்பத்திற்கு ₹20 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது, ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசலுரெட்டி, திவாகர், அவைத்தலைவர் நாகராஜ், துணை செயலாளர் முனிராஜ், முன்னாள் ஊராட்சி செயலாளர் ஜெயராமன், முன்னாள் கவுன்சிலர் கோபால், இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக், பிரகாஷ், மல்லிகார்ஜூனா, நட்ராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags : victims ,
× RELATED காவலர்கள் குடும்பத்துக்கு நிதி