×

சூளகிரி தாலுகா அலுவலகத்தில் 5 நாட்கள் நடந்த ஜமாபந்தி நிறைவு

சூளகிரி, ஜூன் 13: சூளகிரி தாலுகா அலுவலகத்தில், 5 நாட்கள் நடந்த ஜமாபந்தி நேற்று நிறைவடைந்தது. இதில் மின்சாரம் தடைபட்டதால், கணினி சேவை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். சூளகிரி தாலுகா அலுவலகத்தில், கடந்த 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை 5 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, ஓய்வூதியம், ஜாதிச்சான்று, வருமான சான்றுகள் கேட்டு ஏராளமான மக்கள் மனு அளித்தனர். ஜமாபந்திக்கு தாசில்தார் மிருணாளினி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சேதுராமலிங்கம், சமூக நல சிறப்பு தாசில்தார் ரெஜினா, துணை தாசில்தார் சின்னசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜமாபந்தியில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட மின்தடையால், பதிவேற்றம் செய்யும் பணிகள் சில மணி நேரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Tags : Jamabhandi ,office ,Sulagiri Taluk ,
× RELATED 10 ஆண்டுகளாக அவதி சாலை பணி துவங்கா...