×

கிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி, ஜூன் 13:  கிருஷ்ணகிரியில் நாளை (14ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலலவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் விருப்பமுள்ள வேலையளிப்பவர்களும், வேலைநாடுநர்களும் கலந்துகொள்ளலாம். அதன்படி நாளை (14ம் தேதி) காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.

இதில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டயப்படிப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு படித்தவர்கள், 18 வயது முதல் 35 வயதிற்குள் உள்ளவர்கள் பங்கேற்கலாம். இந்த தகுதியுடைய பணிநாடுநர்கள் தங்களுடைய சுயவிவரம் மற்றும் கல்வி சான்றுகளின் நகல்களுடன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என்பதையும் தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags : job camp ,Krishnagiri ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்