×

பா.ரஞ்சித்மீது எஸ்பி அலுவலகத்தில் புகார் ஓடம்போக்கி ஆற்றுபாலத்தில் தடுப்புசுவரை சீரமைக்க வேண்டும்

திருவாரூர், ஜூன் 13: திருவாரூர் நகரையும், பேருந்து நிலையத்தையும் இணைக்கும் ஓடம்போக்கி ஆற்று பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளதால் விபத்து நடப்பதற்கு முன்னதாக அதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் நகராட்சி 30 வார்டுகளை கொண்டதாகும். திருவாரூர் நகரில் கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 54 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அதன் பின்னர் தற்போது 8 ஆண்டு காலத்தில் இந்த மக்கள்தொகை 75 ஆயிரத்தை தாண்டியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் திருவாரூர் நகரையும், பழைய பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே பாலம் நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் கட்டப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் நகருக்குள் செல்வதற்கும், நகரிலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்வதற்கும் மற்றும் மயிலாடுதுறை, நன்னிலம் மார்க்கத்தில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கும் இந்த பாலம் முக்கியமானதாக இருந்து வருகிறது.

இதுமட்டுமின்றி மாவட்டத்தின் கடைகோடி பகுதியான முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டியிலிருந்து மயிலாடுதுறை செல்வதற்கும் இந்த பாலமே முக்கிய வழியாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த பாலத்தின் அடியில் அரசமரம் உள்பட பல்வேறு மர செடிகள் முளைத்துள்ளதால் தற்போது இந்த பாலம் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி பாலத்தின் தடுப்பு சுவரும் சேதமடைந்துள்ளதால் ஏதேனும் விபத்துக்கள் நடப்பதற்கு முன்னதாக போர்க்கால அடிப்படையில் இந்த மரம் செடிகளை அகற்றுவதுடன் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : office ,SP ,Ranjith ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்