மன்னார்குடி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பை சுயதொழிலாக செய்யலாம்

நீடாமங்கலம், ஜூன் 13: நாட்டுக்கோழி வளர்ப்பு குறைந்தமுதலீட்டில் அதிக லாபம் தரும் சுய வேலைவாய்ப்பு தொழில் என்று நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.கிராம புறங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜேஷ்குமார், ராமசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது: நாட்டுக்கோழிவளர்ப்பு கிராமபுற மக்களின் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகளுக்கு நாட்டுக்கோழிகள் நடமாடும் வங்கிகளாக செயல்படும். வருமானத்தை உயர்த்துவதும் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்திற்கு தேவையான புறதத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. நாட்டுக்கோழி வளர்ப்பு குறைந்த முதலீட்டில் அதிகலாபம் ஈட்டவும் சிறந்த சுய வேலைவாய்ப்பு தொழிலாகவும் உள்ளது. கறிக்கோழியின் விலையை விட நாட்டுக்கோழி இறைச்சியின் விலை அதிகமாக இருந்த போதிலும் நாட்டுக்கோழி இறைச்சி உண்ணும் பழக்கம் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. குறைந்த கொழுப்புச் சத்து உள்ள ருசியான இறைச்சியே இதற்கு காரணம். நாட்டுக்கோழிஇனங்கள்.

அசீல், கடக்நாத்கோழி, மொட்டை கழுத்துக்கோழி,சிட்டகாங், நிக்கோபாரி, நாமக்கள் கோழி1, நந்தனம் கோழி2, வனராஜா, கிரிராஜா எனப்படும்.அசீல் சேவல் கோழியின் உடல் எடை 3 முதல் 4 கிலோவரையிலும், பெட்டை கோழியின் எடை 2முதல் 3 கிலோ வரையும் இருக்கும். ஆண்டுக்கு 90 முதல் 100 முட்டைகளை இடும் தன்மைகொண்டது. கடக்நாத் அல்லது கருங்கால் கோழி உடல் உள் உறுப்புகள் கருமை நிறமாக இருப்பது கூடுதல் சிறப்பம்சம்.இவை ஆண்டுக்கு 100 முட்டைகள் வரையும், நிக்கோபாரி 160 முட்டைகள் வரையும், நாமக்கல் கோழி 150 முட்டைகள் வரையும், நந்தனம் கோழி (ரகம் 2) 160 முட்டைகள் வரையும், வனராஜா, கிளிராஜா கோழி 160 முட்டைகள் வரை இடும். எனவே இது போன்ற கோழி வகைகளை குறைந்த முதலீட்டில் வளர்த்து அதிக லாபம் பெறலாம் என்றனர்.


Tags : municipality ,Mannargudi ,
× RELATED தாழ்வாக தொங்கும் உயர் அழுத்த...