×

தெப்பதிருவிழாவுக்கு பந்தல் அமைக்கும் பணி குடிநீர் இணைப்புகளில் முறைகேடாக பயன்படுத்திய மின் மோட்டார்கள் பறிமுதல்

மன்னார்குடி, ஜூன். 13: மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்களில் சட்ட விரோதமாக பொருத்தப்பட்ட மின் மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடும் கோடை காரணமாக குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. பருவ மழை பொய்த்து போனதால் ஆறுகள், குளம், குட்டைகள் ஆகியவற்றில் நீரின்றி காய்ந்து கிடக்கின்றன. நகரத்தில் உள்ள குளங்கள் தேவைக்கு அதிகமான அளவு தூர் வாரப்பட்டாலும் அக்குளங்களுக்கு நீர் வரும் வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால் ஆறுகளில் தண்ணீர் வரும்போதும், மழை பெய்யும்போது கிடைக்கும் நீரை குளங்களில் சேமிக்க முடிவதில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் அதால பாதாளத்திற்கு சென்று விட்டது. வீடுகளில் போடப்பட்ட போர் வெல்களில் தண்ணீர் வருவதில்லை. சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் நகரில் பல பகுதிகளில் குடிநீருக்காக தவிக்கும் நிலை உள்ளது. இருக்கிற குறைந்த அளவு நீரை வைத்து நகராட்சி நிர்வாகம் நிலைமையை சமாளித்து வருகிறது. மேலும் மக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நகராட்சி குடிநீர் குழாய்களில் சட்ட விரோதமாக மின் மோட்டார்களை பொருத்தி முறைகேடாக குடிநீரை உறிஞ்சுவதாகவும், எனவே இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் (பொ ) இளங்கோவன் உத்தரவின் பேரில் நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார், மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் திடீர் சோதனையில் ஈடு பட்டனர். அப்போது நகராட்சி குடிநீர் குழாய்களில் சட்டவிரோதமாக மின் மோட்டர்களை பொருத்தி 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் உறிஞ்சப்படுவதை ஆய்வு நடத்தி கண்டுபிடித்து குழாய்களில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட் டார்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொ ) இளங்கோவன் கூறுகையில், நகராட்சி குடிநீர் இணைப்பில் மின்மோட்டர்களை பொருத்தி குடிநீரை உறிஞ்சுவது சட்டவிரோதமாகும். எனவே சட்டத்தை மீறி இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படும் என கூறினார்.மக்கும் குப்பைகளான காய்கறிக் கழிவுகள், வீணான உணவு பொருட்கள், இறைச்சி கழிவுகள் போன்றவற்றை பச்சை நிற கூடையிலும், மக்கா குப்பைகளான பிளாஸ்டிக் கவர், அனைத்து வகையான உலோக பொருட்கள், ரப்பர் பொருட்கள் உள்ளிட்டவைகளை நீல நிற கூடைகளிலும், காலியான மருந்து டப்பாக்கள், பேன்டேஜ் உள்ளிட்டவைகளை கருப்பு நிற கூடையிலும் போட வேண்டும்.


Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்