×

தொமுச சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா

அரூர், ஜூன் 13: அரூரில் தொமுச சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் விழா, அரூர் ரவுண்டானா அருகே கொண்டாடப்பட்டது. சங்கத்தின் மாநில துணை தலைவர் பழனி தலைமை வகித்தார். விழாவையொட்டி அண்ணா சிலை, கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் உண்ணாமலை, மாவட்ட செயலாளர் பரமசிவம், நாகராஜூ, சரவணன், நிர்மலா, மணிமேகலை, சென்னி, பாப்பாத்தி, ஜெயந்தி, சுப்ரமணி, கிருஷ்ணன், சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Karunanidhi Birthday Celebration ,
× RELATED பூந்தமல்லியில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்