×

திருத்துறைப்பூண்டியில் நடந்த ஜமாபந்தியில் வீட்டுமனைப்பட்டா ரேஷன்கார்டு கேட்டு மக்கள் மனு

திருத்துறைப்பூண்டி, ஜூன் 13: திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 10 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டைகள் கேட்டு மனுக்கள் கொடுத்தனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 77 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி துவங்கியது. தினமு் தினமும் கிராமம் வாரியாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஜமாபந்திக்கு வருவாய் தீர்ப்பாய அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான தெய்வநாயகி தலைமை வகித்தார்.இதில் எழிலூர், சேகல், ஆதிரெங்கம், கட்டிமேடு, பாண்டி, கள்ளிக்குடி, வங்கநகர், மருதவனம், மாங்குடி, ஆரியலூர் ஆகிய 10 வருவாய் கிராமங்களிலிருந்து வீட்டு மனைபட்டா, பட்டா மாறுதல், நில அளவை, குடும்ப அட்டை வேண்டுதல் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். மனுக்கள் உடன் அந்தந்த துறைக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதில் தாசில்தார் ராஜன்பாபு, வட்டவழங்கல் அலுவலர் ராஜாமணி, தனி தாசில்தார் ஞானசுந்தரி, துணை வட்டாட்சியர்கள் குருநாதன், கார்த்திகேயன், ரம்ஜான்பேகம் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : residence ,Ramesharda ,Tiruthuraipothi ,Jamadaddy ,
× RELATED ஆக்கிரமிப்பை அகற்றி பாதை அமைக்கும் பணி தீவிரம்