×

மாவட்ட வணிக வரி அலுவலகம் தர்மபுரியிலேயே இயங்க வேண்டும்

தர்மபுரி, ஜூன் 13: தர்மபுரி மாவட்டத்திற்கான வணிக வரி அலுவலகம் மற்றும் துணை ஆணையர் அலுவலகம், தர்மபுரியிலேயே தொடர்ந்து இயங்க வலியுறுத்தி, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கம் சார்பில், சங்கத்தலைவர் வைத்திலிங்கம், பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகி சாதிக் உள்ளிட்டோர், தர்மபுரி வணிக வரித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்திற்கான வணிக வரி அலுவலகம் மற்றும் துணை ஆணையர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் அருகே கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. தற்போது துணை ஆணையர் அலுவலகத்தை, வேறு இடத்திற்கு மாற்ற சிலர் முயற்சிப்பதாக கேள்விப்பட்டோம். 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த அலுவலகத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கை, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

மாவட்டத்தில் மேலும் சிறந்த முறையில் பணியாற்ற, அலுவலகங்கள் வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு இது மிகப்பெரிய பேரதிர்ச்சியாக உள்ளது. தற்போது நடைமுறையில் செயல்பட்டு வரும் உதவி ஆணையர், வாரத்தில் ஒரு நாள் கிருஷ்ணகிரியிலும், ஒரு நாள் தர்மபுரியிலும் முகாமிட்டு வேலை செய்து வந்தார். அதே நிலையை மீண்டும் நீட்டிக்க வேண்டும். மேலும், உதவி ஆணையர் அலுவலகத்தை, தர்மபுரியிலேயே தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

வெங்கடதாரஅள்ளியில் 5 ஆண்டாக திறக்காத பல்நோக்கு கட்டிடம்:
கடத்தூர், ஜூன் 13: கடத்தூர் அருகே வெங்கடதாரஅள்ளியில், 5 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் பல்நோக்கு கட்டிடத்தை திறக்க வேண்டும் என மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் அருகே வெங்கடதாரஅள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, எம்பி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த 2014-15ம் ஆண்டு ₹7.30 லட்சம் மதிப்பீட்டில், பல்ேநாக்கு கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து 5 ஆண்டுகளாகியும், பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால், அப்பகுதியை சேர்ந்த சிலர் மது அருந்தும் கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இனியும் தாமதம் செய்யாமல் பல்ேநாக்கு கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு திறக்க ேவண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : district business office office ,Dharmapuri ,
× RELATED தருமபுரியில் அரசு பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை