×

விளக்குடி அரசு துவக்கப் பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு நெல்லில் எழுதச்சொல்லி வகுப்புகள் துவக்கம்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 13: திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு நெல்லில் அ, ஆ எழுதவைத்து ஆசிரியைகள் வகுப்புகளை தொடங்கினர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு நெல்லில் அ, ஆ எழுத சொல்லிக்கொடுத்து ஆசிரியைகள் பணியை தொடர்ந்தனர்.மாவட்டக் கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் இன்பவேணி முன்னிலை வகித்தார். இதில் பள்ளி தலைமைஆசிரியர் கமலா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாஸ்கரன், எஸ்எம்சி தலைவி சரண்யா, வட்டார வளமையஆசிரிய பயிற்றுநர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு சரிதா, பார்வதி ஆகியோர் அன்பளிப்பாக சீருடை வழங்கினர். முன்னதாக தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட 60 மாணவர்கள் விளக்குடி கடைத்தெருவில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.நெல் பரப்பி அதில் ஆசிரியர்கள் அ, ஆ என மாணவர்களை எழுத வைத்து வகுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எங்கள் பிள்ளைகள் எங்கள் பள்ளிக்கே என்று அப்பகுதி பெற்றோர்கள் தெரிவித்து அதே பள்ளியில் சேர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : primary school ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...