×

கடை உரிமையாளர்களுக்கு அபராதம் மக்கள் நேர்காணல் முகாமில் 56 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 13: தஞ்சை மாவட்டம் தோகூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை தணிக்கைத்துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது.  கலெக்டர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். தஞ்சை ஆர்டிஓ சுரேஷ் வரவேற்றார். முகாமில் பொதுமக்களிடமிருந்து 280 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 80 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. 200 மனுக்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.முகாமில் ரூ.4,67,750 மதிப்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 10 பயனாளிகளுக்கும், விலையில்லா வீட்டுமனைப்பட்டா 12 பேருக்கும், பட்டா மாற்றம் 56 பேருக்கும், சான்றிதழ் 2 பேருக்கும் வழங்கப்பட்டன. பின்னர் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு சிறு வணிகம் செய்ய வங்கி கடன் பெற கலெக்டர் பரிந்துரை செய்தார்.

நேர்காணல் முகாமில் தோட்டக்கலைதுறை, வேளாண்மைதுறை, பொது சுகாதாரத்துறை, கால்நடைத்துறை சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பிரதமரின் கிசான் விகாஸ் திட்டத்தில் 48 பேருக்கு ஆண்டுக்கு வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கணக்கில் தோகூர் தனியார் வங்கியில் வரவு தரப்படவில்லை என்று 2 புகார்கள் வந்துள்ளதை ஆய்வு செய்ய கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.முகாமில் திருவையாறு முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி, கல்லணை செல்லக்கண்ணு, பூதலூர் ஒன்றிய ஆணையர்கள் காந்தரூபன், கணேசன், பிஆர்ஓ சுருளிபுரபு மற்றும் பலர் பங்கேற்றனர். பூதலூர் தாசில்தார் சிவகுமார் நன்றி கூறினார்.


Tags : Patta ,shop owners ,interview ,
× RELATED போடி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு..!!