×

கஜா புயலால் சேதமடைந்த 50 பாலங்களை மறுசீரமைக்க ரூ.36 கோடிக்கு நபார்டு வங்கி அனுமதி

தஞ்சை, ஜூன் 13: தஞ்சை மாவட்ட நபார்டு உதவி பொது மேலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளதாவது:  கடந்தாண்டு தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகை மாவட்டங்களில் கஜா புயலால் கடும் சேதமடைந்தது. இம்மாவட்டங்களில் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) கஜா புயலால் சேதமடைந்த 147 சாலைகள், 115 பாலங்களை புனரமைக்க ரூ.159 கோடி அனுமதித்துள்ளது. இத்திட்டங்களை 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளன. இதன்மூலம் 4 மாவட்டங்களிலும் 247 சந்தைப்படுத்தல் மையங்களுக்கு 701 கிராமங்களின் இணைப்பு மேம்படுத்தப்படவுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் நபார்டு பரிந்துரையின்பேரில் 1153 மீட்டர் தொலைவுக்கு 50 பாலங்கள் ரூ.36.02 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படவுள்ளது. இந்நிதி கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகளால் ஆர்ஐடிஎப் நிதி பயன்படுத்தப்படுகிறது. இந்நிதி உதவிபெறும் முன்னணி மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். மேலும் தமிழகம் முந்தைய ஆண்டுகளில் பல கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : NABARD ,
× RELATED பால் பாக்கெட்டுகள் தயாரித்து...