×

மலையாளபட்டி அருகே சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்

பெரம்பலூர், ஜூன் 13: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாமலையாளப்பட்டி அருகே கிடப்பில் போடப்பட்ட சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டுமென விவசாய சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநிலக்குழு முடிவுகள் குறித்து மாவட்ட செயலாளர் செல்லதுரை விளக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் கோவிந்தன், கருப்புடையார், கோகுலகிருஷ்ணன், சின்னக்கன்னு, விநாயகம், செல்லதுரை பாலகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மளையாளப்பட்டி அருகே உள்ள சின்னமுட்லு என்ற இடத்தில் நீர்த்தேக்கம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகளும் பொதுமக்களும் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தமிழக அரசு மேற்படி திட்டத்தை ஆய்வு செய்வதற்கு ரூ.39 கோடி ஒதுக்கீட்டில் நிளஅளவை செய்து கல்நடும் வேலை மட்டும் செய்துவிட்டு திட்டம் கிடப்பில் உள்ளது. எனவே உடனடியாக வரும் சட்டமன்ற கூட்டதொடரில் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி ரூ.128 கோடியை ஒதுக்கீடு செய்து நீர்த்தேக்கம் கட்டும் பணியை துவக்க வேண்டும். தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் அதிகம் உள்ளனர். கடந்த ஆண்டு பயிரிட்ட மக்காச்சோளம் அமெரிக்க படைப்புழுவால் தாக்கப்பட்டு பயிரிட்ட விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

  அதன் விளைவாக தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு ஹெக்டெர் ஒன்றுக்கு 7ஆயிரத்து 410 ரூபாயும் நஞ்சையில் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு 10ஆயிரத்து 500 ருபாயும் நிவாரணம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் நிவாரணத்தொகை வழங்கப்படாததால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அரசு அறிவித்த நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்ய வேண்டிய மழையளவு 33 சதவீதம் மட்டுமே என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் கிடைக்காமல் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கவலையடைந்து வருகின்றனர். உடனடியாக வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : project ,Chinnamudula Reservoir ,Malayaipatty ,
× RELATED இந்திய நாட்டுக்கே வழிகாட்டிடும்...