×

பெரம்பலூர் உழவர் சந்தை பின்புறம் குவிந்து கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம்

பெரம்பலூர், ஜூன் 13: பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள
உழவர் சந்தையின் பின்புறம் உள்ள மைதானத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை நாள்தோறும் இயங்கி வருகிறது. இதன் அருகே உள்ள மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.உழவர் சந்தை மற்றும் வாரச் சந்தைக்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இது போல் கொண்டுவரும் காய்கறிகள், பழங்கள் போன்ற பொருள்களில் சேதமடைந்த, அழுகிய, வீணாகிப்போன பல்வேறு காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை அங்கேயே உழவர் சந்தையின் பின்புறம் உள்ள பகுதிகளில் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அங்குப் மலை போல் குவிந்து உள்ள அழுகிய காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இந்த குப்பைகளில் இருந்து உருவாகும் கொசுக்களால் சுற்றுப்புறப் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே பெரம்பலூர் உழவர் சந்தை பின்புறம் மலை போல் குவிந்து உள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Perambalur Farmers Market ,
× RELATED பெரம்பலூர் உழவர் சந்தையில்...