×

கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தை 4 வழி பாதையாக மாற்றக்கோரி எம்.பி.யிடம் மனு

பொன்னேரி, ஜூன் 13: கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தை முழுமையான 4 வழி பாதையாக மாற்றவேண்டும் என திருவள்ளூர் எம்பி ஜெயக்குமாரிடம் பயணிகளும், பொதுமக்களும் மனு அளித்தனர். சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள், தொழில்நுட்ப கோளாறு என பல்வேறு காரணங்களால் நாள்தோறும் புறநகர் ரயில்கள் மிக தாமதமாக சென்று வருகின்றன. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வழித்தடத்தை 4 வழி பாதையாக மாற்ற வேண்டும் என ரயில் பயணிகளும், பொதுமக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், பொன்னேரி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஜெயக்குமார் வந்தி
ருந்தார். அவரிடம், அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் வரை 2 வழி பாதையாக உள்ளதை 4 வழிப்பாதையாக மாற்ற வேண்டும். அதேபோல், புறநகர் ரயில்கள் சென்று, வரும் நேர அட்டவணையில் உள்ளது போல குறித்த நேரத்தில் ரயில்களை இயக்க உரிய நடவடிக்கை வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினரும், பொதுமக்களும் மனு அளித்தனர். இதையடுத்து, “இப்பிரச்னை குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எடுத்து கூறி, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தை 4 வழிப்பாதையாக மாற்ற, மிக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என ஜெயக்குமார் எம்பி உறுதி கூறினார்.

Tags : petitioner ,
× RELATED வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே...