ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் கிளை கழக கூட்டம்

பூந்தமல்லி: மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற நாளன்றே பண பலன்களை வழங்கும்படி ஓய்வு பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை மாநகர போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் அய்யப்பன்தாங்கல் கிளை பேரவை கூட்டம் நேற்று முன்தினம் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள், கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், கடந்த ஆண்டுக்கான வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. பேரவை நிர்வாகி வீரராகவன் சிறப்புரையாற்றினார்.

இதில், அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போல் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தையும் தமிழக அரசே ஏற்று முதல் தேதியே வழங்க வேண்டும். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெறுபவர்களுக்கு, அன்றைய தினமே பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் அய்யப்பன் நன்றி கூறினார்.

× RELATED ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் கிளை கழக கூட்டம்