காதலி அழைப்பதுபோல் பேசி வாலிபரை தாக்கிய 2 சிறுவர்கள் கைது

பூந்தமல்லி: போரூர் கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் பிருத்விராஜ் (20). கார்பென்டர். நேற்று முன்தினம் இரவு இவரது காதலி அழைப்பதாக வளசரவாக்கம் பெத்தானியா நகருக்கு வருமாறு பிருத்விராஜ் செல்போனில் கூறினார். இதை நம்பி பிருத்விராஜ் அங்கு சென்றபோது ஒரு மர்ம கும்பல் அவரை தாக்கியது. இவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த மர்ம கும்பலை துரத்தியதில் 2 பேர் பிடிபட்டனர்.

மர்ம கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த பிருத்விராஜை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிடிபட்ட 2 மர்ம நபர்களிடம் போலீஸ் விசாரித்ததில், அவர்கள் 17 வயது கல்லூரி மாணவர்கள் என தெரிந்தது. ஏற்கனவே பைக் திருடிய வழக்கில் பிருத்விராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு காரணம் தனது நண்பர்கள்தான் என தெரியவந்தது.

இதையடுத்து தனது நண்பரின் பைக் பிருத்விராஜ் தீ வைத்து எரித்து விட்டார். அதற்கு பழிவாங்கவே அவரது 2 நண்பர்களும் முடிவு செய்து, பெங்களூரில் இருந்த பிருத்விராஜை, அவரது காதலி அழைப்பது போல் பேசி சென்னைக்கு வரவழைத்து சரமாரியாக தாக்கியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய 3 பேர் குறித்து 2 சிறுவர்களிடமும் வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். சிறுவர்கள் இருவரையும் கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

Tags : boys ,
× RELATED தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 7 பேருக்கு குண்டாஸ்