நாகையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் இடஒதுக்கீடு

நாகை, ஜூன் 13: உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக இட ஒதுக்கீட்டை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டார். 2019ம் ஆண்டு சாதாரண உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள 21 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் 214 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக இட ஒதுக்கீடு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3426 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக வார்டு வாரியான இட ஒதுக்கீட்டை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டார். திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார் பெற்றுக் கொண்டார். டிஆர்ஓ இந்துமதி, கூடுதல் திட்ட இயக்குநர் பிரதீப்குமார், நாகை சப்-கலெக்டர் கமல்கிஷோர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேர்தல் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் வெளியிட்டார்

Tags : Panchayat ,Board Member ,
× RELATED ஏஎப்டி பஞ்சாலை மூடப்படுகிறது