×

தலைஞாயிறு பகுதியில் 283 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

வேதாரண்யம், ஜூன் 13: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு 283 அம்மா தாய் சேய் நல ஊட்டசத்து பெட்டகம் வரபெற்று உள்ளது. தலைஞாயிறு அரசு மருத்துவமனையில் தற்போது 38 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த பெட்டக பை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாலுவேதபதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 75 பெட்டகமும், நீர்முலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 50 பெட்டகமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெட்டகத்தில் தாய்மார்களுக்கு தேவையான தாய் ஊட்டசத்து மாவு, நெய், முந்திரி, பேரிச்சபழம், குடல் புண் மாத்திரை உள்ளிட்ட 7 வகையான பொருட்கள் உள்ளது என்றும், வாரம்தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு தலைஞாயிறு அரசு மருத்துவமனையில் இந்த பெட்டக பை வழங்கப்பட்டு வருகின்றது என்று தலைஞாயிறு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தர் தெரிவித்தார்.

Tags : women ,area ,Thayyannai ,
× RELATED சென்னையில் அகில இந்திய அளவிலான பெண்...