×

காற்று பலமாக வீசுவதால் அடிக்கடி மின்தடை: மக்கள் அவதி

கரூர்,ஜூன்13: கரூரில் காற்றுபலமாக வீசுகிறது. அடிக்கடி மின்சாரம்தடைபடுவதால் மக்கள்அவதிப்படுகின்றனர். கரூர் பகுதியில் கடும்வெயில் அடித்துவந்தது.கடந்த சில நாட்களாக வெயில் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. மேலும் காற்று பலமாக வீசுகிறது. இதனால் மரங்கள் பேயாட்டம் போடுகின்றன. சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். நடந்துசெல்பவர்கள் மீது தூசி வாரிஇறைப்பதால் துணிகளை முகத்தில் போட்டவாறுசெல்கின்றனர். பலத்த காற்றுகாரணமாக அடிக்கடி மின்சாரம்தடைபடுகிறது. பலஇடங்களில் மரக்கிளைகள்உரசுவதால் மின்சாரம் தடைபடுகிறது.மேலும் மின்கம்பிகளை உரசும் மரக்கிளைகளை முன்னதாகவே வெட்டி அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் அந்த பணியையும் செய்கின்றனர். தாந்தோணிமலை துணை மின்நிலையத்தில் என்ன பிரச்சனை எனதெரியவில்லை. அடிக்கடி மினசாரம்போவதும் வருவதுமாக உள்ளது.இதனால் மின்சாதனங்கள் பழுதடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது