×

பணித்தளங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

கரூர், ஜூன் 13: பணித்தளங்களில் வேலை செய்யும்பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. பணித்தளங்களில் வேலை செய்யும் பெண்கள் பிரச்சனை பற்றிய பயிற்சித்திறன் விழிப்புணர்வுக் கூட்டம் நாகலட்சுமி தலைமையில் நடைபெற்றது. பூபதி வரவேற்றார். கல்யாணசுந்தரம், பணித்தளங்களான டெக்ஸ் நிறுவனங்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும்100நாள் வேலைத் திட்டம் ஆகிய அமைப்புகளில் வேலை செய்யும் பெண்கள் பிரச்னை, தொழிலாளர் நலச்சட்டங்கள், தற்கால நடைமுறைகள், தீர்வுகள் என்பது பற்றி பேசினார். பணிசெய்யும் பெண்கள் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் மருத்துவ முதலுதவி, சம்பளத்துடன் கூடிய விடுப்பு, கர்ப்பிணிபெண்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லங்கள், சம ஊதியம், இஎஸ்ஐ பற்றிய புகார்கள், சம்பள பாக்கி, பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகள், பற்றி விவாதிக்கப்பட்டன. மேலும் இதற்கான தீர்வுகளுக்கு அரசுசாரா நிறுவனங்கள், மத்திய மாநில அரசுகளுக்கும், தொழில்நிறுவனங்களுக்கும் வேண்டுகோள்வைப்பது, தேவைப்படும்பட்சத்தில் போராட்ட வடிவிலும், பெண்கள்அமைப்புகளை ஒன்றுதிரட்டுவதன் மூலம் தீர்வுபெற முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நித்யா நன்றி கூறினார்.

Tags : women ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...