×

காற்றில் குப்பைகள் பறப்பதை கண்டித்து நகராட்சி லாரியை மக்கள் சிறைபிடிப்பு

கரூர்,ஜூன் 13: நகராட்சி லாரிகளில் இருந்து காற்றில் குப்பைகள் பறப்பதை கண்டித்து பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனர். கரூர் நகராட்சியில் 48வார்டுகள் உள்ளன. தினமும் சராசரியாக 100டன் குப்பைகள்சேர்கின்றன.இவற்றை டம்பர்பிளேசர் லாரிகள்மூலமாக வாங்கல்சாலையில்உள்ள குப்பை கிடங்குக்குகொண்டு கொட்டிவருகின்றனர். குப்பைஅள்ளிசெல்லும் லாரிகளில்உள்ள டம்பர்பிளேசர்கள் கடந்த 6ஆண்டுகளுக்குமுன்னர் வாங்கப்பட்டவை. இவைபெரும்பாலும் ஓட்டைஉடைசலாக காணப்படுகிறது. இதுதவிர தொண்டுநிறுவனங்கள் சார்பில் டம்பர்பிளேசர்கள் வாங்கிகொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3ஆண்டாக உள்ளாட்சித்தேர்தல் நடத்தாதால் நிர்வாகம் ஸ்தம்பித்துப்போய்உள்ளது. இந்நிலையில் நேற்று காலை வாங்கல்சாலையில்உள்ள குப்பை கிடங்கிற்கு சென்ற லாரிகளில்இருந்து குப்பைகள் பறந்தன. அவ்வழியே இருசக்கரவாகனங்களில் சென்றவர்கள் மீதும்,நடந்து சென்றவர்கள் மீதும் குப்பைகள் பறந்து விழுந்தன. இதனையடுத்துஅப்பகுதியினர் குப்பை லாரிகளை நிறுத்தி சிறை பிடித்தனர். பழுதான ஓட்டைஉடைசல் குப்பைதொட்டிகளை மாற்றவேண்டும். மேலும் காற்றடிக்க ஆரம்பித்து விட்டதால் குப்பைகளை மேல்புறம் படுதாபோட்டு மூடி செல்லவேண்டும். பலமுறை இதுபற்றி கூறியும்நடவடிக்கை இல்லை என்றனர். குப்பை கிடங்கில் இருந்தவர்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நகராட்சி அலுவலர்கள் அங்கு வந்து இனி இடையூறு இல்லாதவாறு குப்பைகளை அள்ளிசெல்வதாக கூறி சென்றனர்.

Tags :
× RELATED வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும்...