×

பல்லடம் நெசவு பூங்கா வளாகத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு

பொங்கலூர்,ஜூன்13: பல்லடத்தில் உள்ள உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா வளாகத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் சென்ற போது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்களும், அதில் ஆயிரக்கணக்கான  தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பூங்கா வளாகத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து பல்லடம் வருவாய்த் துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்ததாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புக் கட்டிடத்தை அகற்றவும் பல்லடம் வருவாய்த்துறையினர் வட்டாட்சியர் சாந்தி தலைமையில் சென்றனர். அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம்  ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கைக்கு ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.மேலும் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைக்காக குவிக்கப்பட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : complex ,Paladam Weaving Park ,
× RELATED புராதன சின்னங்கள் வளாகத்தில் உயரமான கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரம்