அங்கன்வாடி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி துவக்கம்

கோவை, ஜூன் 13:கோவை அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கு நேற்று முதல் மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் 122 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. இதில், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி இன்று முதல் வரும் 14ம் தேதி வரை அளிக்கப்படுகிறது. பெரியநாயக்கன்பாளையம் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இரண்டு இடங்களில் மொத்தம் 122 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வள மையத்தில் கோவை நகரம், பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், பேரூர், தொண்டாமுத்தூர், அன்னூர், காரமடை, சுல்தான்பேட்டை, சூலூர் பகுதி ஆசிரியர்கள் 57 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி வடக்கு வட்டார வள மையத்தில் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, மதுக்கரை வட்டார வள மையத்தை சேர்ந்த 65 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சியை முதன்மை கருத்தாளர்கள் அளிக்கின்றனர்.

Tags : Anganwadi Elgji ,Teachers ,UK ,
× RELATED இலவச எம்ப்ராய்டரி பயிற்சி துவக்கம்