×

மாநகரில் குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

கோவை, ஜூன் 13:கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகராட்சிக்குட்ப்பட்ட பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக வந்த தகவலை அடுத்து கோவை, வேலாண்டிபாளையம் நல்லாம்மாள் வீதி, கிருஷ்ணகோயில் வீதி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன் ஜடாவத் ஆய்வுசெய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கவும் அப்பகுதி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். வேலாண்டிபாளையம் தெக்கலூர் ஓடை பகுதிகளில் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி, உதவி ஆணையர் செந்தில்குமார்ரத்தினம், மாநகர நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், செயற்பொறியாளர் சசிப்பிரியா, மண்டல சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் சத்ய மூர்த்தி, ஏஞ்சலினா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.'

Tags : Municipal Commissioner ,city ,
× RELATED சீர்காழி நகராட்சி பகுதியில் தடை...