×

தூத்துக்குடி கலெக்டர், எஸ்பி அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி, ஜூன் 13: தூத்துக்குடி கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஒவ்வொரு  ஆண்டும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக  கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று தூத்துக்குடி மாவட்ட எஸ்பி  அலுவலகத்தில் எஸ்பி முரளிராம்பா தலைமையில், உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்திய அரசியலைமைப்பு  விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14  வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த  மாட்டேன். பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன். குழந்தைத்  தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக  மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்  என உறுதிமொழி எடுத்தனர்.  நிகழ்ச்சியில் காவல்துறை அமைச்சுப்பணி  நிர்வாக அதிகாரிகள் சுப்பையா, சிவஞானமூர்த்தி, அலுவலக கண்காணிப்பாளர்கள்  சுடலைமணி, மயில்குமார், கணேச பெருமாள், எழில் செல்வம், மாரியப்பன்,  ராபர்ட், நம்பிராஜன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி  ஆய்வாளர் உமையொருபாகம், சிவக்குமார், காவல் துறையினர் மற்றும் அமைச்சுப்  பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் தேசிய குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினர் தொழிலாளர்  திட்டத்தின் மூலம் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி  எடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)  மரகதநாதன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மக்கள்  தொடர்பு அலுவலர் சீனிவாசன், கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்)  இளங்கோ, தாசில்தார் (தேர்தல்) நம்பிராயன், சைல்டுலைன் 1098  ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் திட்ட  இயக்குநர் ஆதிநாராயணன், திட்ட மேலாளர் செல்வம், மாவட்ட குழந்தைகள்  பாதுகாப்பு அலுவலர் ஜோதிக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்)  ராமசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : collector ,Tuticorin ,Office ,SP ,
× RELATED 2 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான சேவை தொடக்கம்