×

சாத்தான்குளம் அருகே கோஷ்டி மோதல்; 9 பேர் மீது வழக்கு\

சாத்தான்குளம், ஜூன் 13: சாத்தான்குளம்  அருகே உள்ள தச்சன்விளை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா (54). இதே பகுதியை சேர்ந்தவர் வழிகாத்தபெருமாள் மனைவி மாடத்தி (40). வீட்டு கழிவுநீர்  செல்வது தொடர்பாக இவர்களிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 10ம் தேதி இவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு  ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் சுப்பையா மற்றும் மாடத்தி காயமடைந்து சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தட்டார்மடம் போலீசில்  புகார் செய்தனர். சுப்பையா அளித்த புகாரில் வழிகாத்தபெருமாள், அவரது  மனைவி மாடத்தி மற்றும் சுடலைமகன் முத்து, மாடசாமி மகன் சுப்பிரமணியன் ஆகியோர் மீதும், மாடத்தி அளித்த  புகாரில் பண்டாரம் மனைவி, மகள் மற்றும் மகன்கள் முருகன்,  சுப்பிரமணியன் மற்றும் சுப்பையா மகன் இசக்கிராஜா ஆகிய 5 பேர் மீதும்  போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன்,  எஸ்ஐ சுரேஷ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Faction clash ,Sathankulam Case ,
× RELATED திருப்போரூர் கோஷ்டி மோதல்.! ரியல் எஸ்டேட் அதிபர் கைது