×

நெல்லை அருகே மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

தாழையூத்து ஜூன் 13:  நெல்லை அடுத்த கங்கைகொண்டான் சோதனை சாவடியில் போலீசார் வழக்கம் போல நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த இரு லாரிகளை போலீசார் நிறுத்தினர். ஆனால் போலீசாரை கண்டதும் லாரியை ஓட்டி வந்தவர்கள் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடினர். இதையடுத்து லாரிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் லாரிகளில் அனுமதி இல்லாமல் மணல் கடத்திவரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து இரு லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் மணல் கடத்திய லாரிகள் கன்னியாகுமரியை சேர்ந்தவை என்பதும் லாரியை ஓட்டி வந்தவர்கள் மார்த்தாண்டத்தை சேர்ந்த தவசிமுத்து மகன் ரைமன்(44), தேவரஜ் மகன் ஜோஸ்(28) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து  கங்கைகொண்டான் எஸ்.ஐ. லிதியாசெல்வி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவர்களை தேடிவருகின்றனர்.

Tags : Sandy ,Nellai ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி