×

ஆழ்கடல் மீன்பிடித்திட்ட ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம், ஜூன் 12:  ராமநாதபுரம், நாகபட்டிணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட நான்கு மாவட்ட ஆழ்கடல் மீன்பிடித்திட்ட செயல்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் மீன்வளத்துறை அலுவகத்தில் நடைபெற்றது. மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நான்கு மாவட்ட மீன்வளர்ச்சி துறை உதவி மற்றும் துணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் உள்ளிட்ட 4 கடலோர மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடித்திட்டத்தில் இதுவரை 589 பேர் விண்ணப்பித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களுக்கு படகுகள் வழங்கப்பட்டு  மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மேலும் 4 படகுகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளன.

நாகபட்டிணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் 13 படகுகள் விரைவில் மீன்பிடித்தலில் ஈடுபடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாக்ஜலசந்தி பகுதியில் மாவட்டங்களில் ஓரிரு ஆண்டுகளுக்குள் 500க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகள் இயக்கப்படவுள்ளன. ஆழ்கடல் மீன்பிடிப்பு தொடர்பாக 4 மாவட்டங்களில் 251 மீனவர்களுக்கு மத்திய மீன்பிடி தொழில் நுட்ப பயிற்சி மையம் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் 500 மீனவர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆழ்கடலில் தூண்டில் முறையில் பிடிக்கப்படும் மீன்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், அது குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் விரைவில் ராமேஸ்வரத்தில் நடத்தப்படவுள்ளது. இதில் மீனவர்கள், மீன் விற்பனை ஏற்றுமதியாளர்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகளை அமைப்போர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Deep sea fishing advice meeting ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை