×

கீழக்கரை பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்

கீழக்கரை, ஜூன் 12:  கீழக்கரை நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் நடுத்தரவர்க்கத்தினர் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஆகவே கீழக்கரை நகராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரையில் 10க்கும் மேற்பட்ட தனியார் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் படிப்பதற்கு பணம் கட்ட வேண்டியுள்ளதால் சிலர் பாதியில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது அரசு பள்ளிகளில் அனைவரும் குழந்தைகளை சேர்க்கும்படி பலவகையில் அரசு விளம்பரம் செய்து வரும் நிலையில், கீழக்கரையில் மட்டும் அரசு நடுநிலை பள்ளியோ, மேல்நிலை பள்ளியோ இல்லாமல் உள்ளது. எனவே ஏழை,எளிய மக்கள் மேல்நிலைப் பள்ளி படிப்பை தொடருவதற்கு அரசு மேல்நிலை ப்பள்ளி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்க செயலாளர் செய்யது இபுராகிம் கூறுகையில், கீழக்கரை தனிதாலுகாவாக மாறி பல வருடங்கள் ஆகியும் இதுவரை அரசு நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி இல்லாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கின்றது. மேலும் நகராட்சிக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் இடம் (பழைய குப்பை கிடங்கு) கிழக்குத் தெருவில் எந்த பயனும் இல்லாமல் கிடக்கின்றது. அந்த இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : high school ,area ,
× RELATED வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி