×

தொண்டியில் கடுமையான காற்று கடலுக்கு செல்ல மீனவர்கள் தயக்கம்

தொண்டி, ஜூன் 12:  கடந்த ஒரு வாரமாக கடுமையான காற்று வீசுவதால் கடலில் சீற்றம் காணப்படுவதாகவும், அதனால் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல அச்சமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் விசை படகுகள் ஆழ்கடலுக்கு முன் பிடிக்க செல்லவில்லை. நாட்டு படகுகள் மட்டுமே கரை ஓரங்களில் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் மீன் வரத்து குறைவாக இருப்பதால் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கடுமையான காற்று வீசுகிறது.
இது கடலில் அதிகமாக இருப்பதாகவும் படகில் செல்ல அச்சமாக இருப்பதால் கடந்த சில நாட்களாக நாட்டு படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மேலும் மீன்வரத்து குறைந்து விட்டது. இதனால் விலையும் அதிகரித்துள்ளது. இது அசைவ பிரியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புயல் அறிவிப்பால் சில நாட்கள் கடலக்கு செல்ல வில்லை.

தற்போது காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறிதது மீனவர் ஆறுமுகம் கூறியது, ‘மீன்பிடி தடைகாலம், புயல்,மழை என அவ்வப்போது கடலுக்கு செல்ல முடியாமல் போய் விடுகிறது. கடந்த சில நாட்களாக காற்று அதிவேகமாக வீசுவதால் கடலக்கு செல்ல பயமாக உள்ளது. இதனால் கடந்து 4 நாட்களாக கடலக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கரை ஓரங்களில் கரை வலை மூலம் மட்டுமே மீன் பிடித்து வருகிறோம். தொடர்ந்து இதுபோல் நடப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது’ என்றார்.

Tags : Fishermen ,sea ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...